PM announces rain relief

தமிழகத்துக்கு மழை நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சென்னை வந்த பிரதமர் மோடி, முதலமைச்சர், துணை
முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குப் பிறகு இதனை அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தினத்தந்தி பவள விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில்
பங்கேற்பதற்காக அவர் சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்றார். இதையடுத்து, பிரதமர் மோடி,
அடையாறு ஐ.என்.எஸ். தளத்துக்கு வந்தார்.

அடையாறு ஐ.என்.எஸ். தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மழை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.

தமிழக மழை நிவாரணம் உள்ளிட்டவை குறித்து சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு,
தமிழகத்துக்கு மழை நிவாரணம் அளிக்கப்படும் என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை, பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி, மதியம் 12.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளார்.