அரவு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசு, ‘’அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகலவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த அகவிலைப்பட்கி 2019 ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் ஏற்கெனவே 9 சதவிகித அகவிலை படியையும் சேர்த்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகள் நேற்றுவரை அமலில் இருந்ததால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாத சூழலில் தேர்தல் முடிந்த மறு நாளே இந்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்த அறிவிப்பை அரசு ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.