Asianet News TamilAsianet News Tamil

என்னை வெளியே விடச்சொல்லுங்க...!அமித்ஷாவுக்கே வாட்ஸ் ஆப்பில் வீடியே போட்ட முன்னாள் முதலமைச்சரின் மகள்...!

வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் துப்பாக்கி முனையில்களில்  தடுக்கப்பட்டுள்ளோம். எங்களை யாரும் சந்திக்க வருவதும் இல்லை, நாங்களும் யாருடனும் சந்தித்து பேச முடிவதில்லை, என் வீட்டுக்கதவை தாண்டி பாதுகாப்பு படை வீரர்கள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். அடிக்கோரு முறை எங்கள் வீட்டு வாசலுக்கு படையெடுத்து வந்த ஊடகங்கள் இப்போது எங்கோ ஒடிப்போய் மறைந்து விட்டார்கள். எங்களது குறைகளை கேட்கவும் ஆட்கள் இல்லை...

please release me ex cm daughter
Author
Kashmir, First Published Aug 16, 2019, 1:02 PM IST

உணர்ச்சிகள் அற்றமிருகம் போல் நடத்தப்படுகிறோம் என காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்  மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். please release me ex cm daughter

சமீபத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்துசெய்தது, இந்நிலையில் காஷ்மீரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய தலைவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் உள்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ”இந்திய நாடே சுதந்திரத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது நாங்கள் மட்டும் முல்வேலிக்குள் அடைக்கப்பட்ட அகதிகளைப்போல் உணர்கிறோம். please release me ex cm daughter

இங்கு எங்கள் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறது , வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் துப்பாக்கி முனையில்களில்  தடுக்கப்பட்டுள்ளோம். எங்களை யாரும் சந்திக்க வருவதும் இல்லை, நாங்களும் யாருடனும் சந்தித்து பேச முடிவதில்லை, என் வீட்டுக்கதவை தாண்டி பாதுகாப்பு படை வீரர்கள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். அடிக்கோரு முறை எங்கள் வீட்டு வாசலுக்கு படையெடுத்து வந்த ஊடகங்கள் இப்போது எங்கோ ஒடிப்போய் மறைந்து விட்டார்கள். எங்களது குறைகளை கேட்கவும் ஆட்கள் இல்லை...எங்கள் நிலைமையை யாரிடம் சொல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை, சொல்வதை கேட்டு நடந்துகொள்ளுங்கள் இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அடிக்கடி எச்சரிக்கப்படுகிறோம். என அவர் இதில் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி அவர் 

please release me ex cm daughter

வாட்ஸ்ப் ஆடியோ மெசேஜ் ஒன்றையும்  பதிவிட்டுள்ளார்,  அதில் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு குற்றவாளியைப்போல் நடத்தப்படுகிறேன், தொடர்ந்து பாதுகாப்பு படைவீரர்கள் என்னை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள் எனக்கும் காஷ்மீர் மக்களுக்கும் வாழ்க்கையை குறித்த அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் அப்பதிவில் அவர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios