2019 ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்குவதற்கான நாமினேஷன் தற்போது ஆரம்பித்திருக்கிறது. இயற்பியல் , வேதியியல், பொருளாதாரம், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் இந்த நோபல் பரிசு வழங்கப்படும். 

இந்த 2019ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசிற்கான பரிந்துறை குறித்து பேசி இருக்கும் , தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் “ மோடியின் பெயரை நாம் அனைவரும் சேர்ந்து 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற பரிந்துறை செய்திட வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய தமிழிசை சவுந்தர்ராஜன் “ மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவர் ஆரம்பித்த பிரதம மந்திரியின் ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தால், ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவத்தினை பெற முடிந்தது. இந்த காரணத்திற்காக அவரின் பெயரை நாம் பரிந்துறை செய்திட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராக இருக்கும், நெப்ராலஜி மருத்துவரான தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனும் கூட மோடியின் பெயரை இந்த விருதிற்கு பரிந்துறை செய்திருப்பதாக அவர் அப்போது தெரிவித்திருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசை அன்னை தெரசா தான் முதல் முறையாக இந்தியாவிற்கு பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.