தன் தந்தைக்கு நோயின் தன்மை குறைந்த அளவே உள்ளது என்றும், நோய் அறிகுறிகளும் இல்லை என்றும்,  ஆர்.எஸ் பாரதியின் மகன் மருத்துவர் சாய் லட்சுமிகாந்த்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- 

எனது அப்பாவும் திமுக அமைப்பு செயலாளருமான திரு. ஆர். எஸ். பாரதி எம்.பி அவர்கள் பாராளுமன்ற நடவடிக்கையில் ஈடுபட டெல்லி சென்ற போது லேசான காய்ச்சல் உடல் வலி ஏற்பட்டதால் எனது அறிவுறுத்தலின் பெயரில் சென்னை திரும்பினார்.அடுத்த நாளே சென்னை மாநகராட் சியில் கொரொனா பரிசோதனை மேற்கொண்டார். இன்று அதன் முடிவு கொரொனா தொற்று இருப்பதை உறுதி செய்திருக்கிறது.

 

இப்போது அப்பா நலமாக உள்ளார். நோயின் தன்மையும் குறைந்த அளவே உள்ளது. நோய் அறிகுறிகளும் இல்லை. மூச்சுவிடுவதிலும் எந்த சிக்கலும் இல்லை. வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வேறு யாருக்கும் நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. நானும் என் மனைவியும் கொரொனா மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வந்ததால் ஆரம்பம் முதலே எங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். 

அப்பா தற்போது ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எனது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.அவரின் மீது அன்பும் பாசமும் கொண்ட கழக உடன்பிறப்புகள் அவரை தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள் கிறேன்.அவரின் உடல்நிலை குறித்து தகுந்த நேரத்தில் தகவர்களை என் முகநூலில் பதிகிறேன். தொலைபேசியிலும் முகநூலிலும் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அப்பா மீண்டு வருவார்.என ஆர்.எஸ் பாரதியின் மகன் 
தெரிவித்துள்ளார்.