Asianet News TamilAsianet News Tamil

அப்படியெல்லாம் அரசுக்கு உத்தரவு போட முடியாது... உயர் நீதிமன்றம் கறார்...!

கொரோனாவால் இறக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட முடியாது உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

plea seeking relief fund who are all died corona chennai high court concluded
Author
Chennai, First Published Jun 8, 2021, 3:47 PM IST

கோவையை சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளை தொடர்ந்திருந்தார். அதில் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய நிவாரணம் வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பெற்றோர் இல்லாத குழந்தைகளின் நலன் காக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தார். கோவையை சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா பரவல் குறையாததால் அங்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிட வேண்டுமென மற்றொரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

plea seeking relief fund who are all died corona chennai high court concluded

இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரங்களை எதிர்த்து தொடரப்படும் பெரும்பாலும் பொது நல வழக்குகள் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்படுவதாக குறிப்பிட்டனர். நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட முடியாது என தெரிவித்தனர்.

plea seeking relief fund who are all died corona chennai high court concluded

மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என குறிப்பிட்டு, அவை நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். கோவை உள்ளிட்ட பல பகுதிகளிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒருவேளை நடவடிக்கை தேவைப்பட்டால், நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்ப்பிக்கப்படும் என கூறி பூமிராஜ் தொடர்ந்த இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios