சென்னையில் அமைந்துள்ள அம்மா முனேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரியாக அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தீடீர் என வண்டியில் இருந்த படியே, டிடிவி தினகரன் கார் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். 

இந்த சம்பவத்தில், புகைப்பட கலைஞர் ஒருவரும், கார் ஓட்டுனரும் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அறிந்து, விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள், அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்து வருகிறார்கள். விரைவில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டு பிடிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.