எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். அவருக்கு தற்போது 123 எம்எல்ஏ க்கள் ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டது.. காலை 11 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் பங்கேற்பதற்காக சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்துரில் இருந்து சட்டமன்றம் வந்து சேர்ந்தனர். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இங்கு வந்து சேர்ந்தார்.

இதேபோன்று ஓபிஎஸ் ஆதரவாளர்களும் சட்டப் பேரவைக்கு வந்து சேர்ந்தனர்.

இதனிடையே எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வாக்கெடுப்பில் கலந்து கொள்ள எம்எல்ஏக்களுடன் தலைமைச் செயலகம் வந்தார். ஆனால் அவரது காரை சட்டப்பேரவை வளாகத்துக்குள் அனுமதிக்க காவல் துறை மறுத்தது.

இதையடுத்து ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களுடன் சட்டப் பேரவைக்குள் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஸ்டாலினின் காரை உள்ளே அனுமதிக்க மறுத்த காவல் துறையை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர்.