தனியார் தனியார் தொலைக்காட்சியில் அம்பேத்கர் பற்றிய தொடர் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதிய வன்மத்தோடு சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கரூர் விஜி என்பவரை சீமான் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். 

வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவரான கரூர் விஜி, அம்பேத்கர் தொடர் குறித்து தனது முகநூல் பதிவில், ‘’ ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பப்படுகிறது.  இது சாதி வெறியின் உச்சம். உடணடியாக அரசு தலையிட்டு இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். பெரியார், அம்பேத்கர் போன்றோர் இச்சமுதாயத்திற்கே விஷம். இவர்களின் முட்டாள்தனமான கொள்கைகளின் எழுச்சிஆல் ந்ம் சமுதாயம் அதன் தனித்தன்மையை இழந்து விட்டது என்றே கூறலாம். பசும்பொன் முத்துராமலிங்கம், தீரன் சின்னமலை, காமராஜர் போன்ற ஆன்றோர், சான்றொர்களின் பெருமையை மழுங்க செய்தவர்களை கொண்டாடுவதா? என எதிர்ப்புத் தெரிவித்து இருந்தார். 

இதனையடுத்து  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூர் விஜியை தொலைபேசியில் அழைத்து கடுமையாக திட்டியதாக தெரிகிறது. அப்போது நடந்தவற்றையும் கரூர் விஜி தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில், ‘’அண்ணனுடன் தொலைபேசி உரையாடல் முடிந்தது. அன்புள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு, தங்கள் சொல்லிற்கு கட்டுப்பட்டு அம்பேத்கர் தொலைக்காட்சி தொடர் குறித்த என் சமீபத்திய பதிவை நீக்கிவிட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி. அண்ணன் என்ற முறையில் நீங்கள் என்னை உரியமையோடு திட்டியதை கூட ஏற்றுக்கொள்வேன். ஆனால் கருத்து சுதந்திரம் இல்லாத கட்சியில் இனிமேலும் என்னால் நீடிக்க முடியாது. 

நாம் தமிழர் கட்சியில் எந்த பலனையும் எதிர்பார்க்காமல், கடந்து 8 ஆண்டுகளாக அயராது உழைத்து வருகிறேன்.நான் சம்பாதிக்கும் சொற்ப பணத்தை கூட எனக்காக சேர்த்து வைக்காமல் கட்சிக்காக செலவிட்டேன். நாம் தமிழர் கட்சியில் இருப்பதால் உறவினர், நண்பர், அந்நியர் என அனைவரும் என்னை எவ்வளவோ கேலி செய்தனர். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அயராது உழைத்தேன். இன்று என் தியாகயத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் என்னை உதாசீனம் செய்யும் விதமாக உங்கள் பேச்சு அமைந்தது. வருத்தம் தான் இருந்தும் பரவாயில்லை. என்னை நான் தேற்றி கொள்கிறேன். 
ஆனால் சொந்த கருத்திற்கு மரியாதை இல்லாத கட்சியில் இனியும் என்னால் நீடிக்க முடியாது. உடனே இராவணன் குடிலை நோக்கி செல்கிறேன், என் உறுப்பினர் அட்டை மற்றும் பொறுப்புகளை ஒப்படைக்க. உங்கள் லட்சியம் வெல்லட்டும். உடன் இல்லாவிட்டாலும் உங்கள் வெற்றியை என் மனதார கொண்டாடுவேன். நன்றி வணக்கம்’’ எனத் தெரிவித்துள்ளார். 

இதனால் கரூர் விஜியின் சாதி வெறியை சுட்டிக்காட்டி, நாம் தமிழர் கட்சியில் சாதி வெறியர்கள் எப்படியெல்லாம் பதிவிடுகிறார்கள் என பலரும் முகம் சுழித்து வருகின்றனர்.