சிறுமி பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரை  சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா (15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். வந்த சில நாட்களிலேயே தான் கடுமையாக சித்ரவதை செய்யப்படுவதாக, கேரளாவில் இருந்த தன் தாய் சுசீலாவை தொடர்புகொண்டு சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் பெரம்பலூருக்கு விரைந்தனர்.

ஆனால், அதற்குள் சிறுமி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். ஆனால், தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக  பெற்றோர் புகார் கூறினார். இதனையடுத்து, பிரேத பரிசோதனை சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து  ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெயசங்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கும் அவரது நண்பர் ஜெயசங்கருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.