People will give good revenge to the traitor - Thanga Thamilselvan

எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அரசு இணையதளத்தில் இருந்து 18 பேரையும் நீக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதில் ஜக்கையன் மட்டும் எடப்பாடிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, டிடிவி அணியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன்குக் ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து கடந்த 18 ஆம் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

சபாநாயகர் தனபாலின் இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, தகுதி நீக்க உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ஆனால், சட்டசபையில் பொதுவாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரண வரும் 4 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் பெயர்கள், படங்கள் உள்ளிட்டசை சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் தொகுதிகளும் காலியாக உள்ளதாக இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பேசிய தங்க தமிழ்செல்வன், சட்டத்தை மதிக்கிறவர்கள் யாரும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. சட்டத்தை மதிக்காதவர்கள் ஆட்சி நடத்தி வருகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அரசு இணையதளத்தில் இருந்து 18 பேரையும் நீக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் துரோக கும்பலுக்கு வருங்காலத்தில் மக்கள் நல்ல பதிலடி கொடுப்பார்கள். மக்கள் மன்றத்தில் மட்டும் அல்ல நீதி மன்றத்திலும் எங்களுக்கு வெற்றி விடைக்கும் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.