Asianet News TamilAsianet News Tamil

உதயநிதியின் அரசியல் பயணத்தை மக்கள் தீர்மானிப்பார்கள்... கடுங்கோபத்தில் மு.க.ஸ்டாலின்..!

திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

People will decide the political journey of Udayanidhi ... MK Stalin in a rage
Author
Tamil Nadu, First Published Mar 5, 2021, 11:54 AM IST

திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ’’உதயநிதியின் அரசியல் பயணத்தை தீர்மானிக்கப்போவது  நான் அல்ல; மக்கள் தீர்மானிப்பார்கள். எனது மகனின் அரசியல் பயணம் அவரது செயல்திறன் மற்றும் தமிழக மக்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும்.People will decide the political journey of Udayanidhi ... MK Stalin in a rage

உதயநிதிக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படுமா எனக் கேட்கிறார்கள். திமுகவில் கருத்தியல் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் நேர்மையாக செயல்படும் நபர்களை  மதிக்கிறது. இன்று நான் இருக்கும் இடத்திற்குச் வருவதற்காக திமுகவின் அடிப்படையில் இருந்து சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். உதயநிதியும் மற்றவர்களைப் போலவே அடிப்படையில்  கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அவரது செயல்திறன் மற்றும் தமிழக மக்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அவரது முன்னோக்கி செல்லும் பயணம் முடிவு செய்யப்படும்.

People will decide the political journey of Udayanidhi ... MK Stalin in a rage

வாரிசு  அரசியல் குறித்து  என்னிடம் கேள்வி கேட்க எவருக்கும் தகுதியில்லை. மக்களவையில் உள்ள ஒரே அதிமுக உறுப்பினர் யார்? அது பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். பன்னீர்செல்வத்தின் மற்றொரு மகன், தேர்தலில் போட்டியிட விருப்பமனு சமர்ப்பித்துள்ளார். உள்துறை அமைச்சர்  அமித் ஷாவின் மகன் பி.சி.சி.ஐ.ல் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுபோல ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

ஆளும் அதிமுக கட்சி மீதும், பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதிமுக அரசு மற்றும் அமைச்சர்களின் மீது ஊழல்குற்றச்சாட்டு பட்டியல் 2முறை ஆளுநரிடம் வழங்கியபோதும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக அரசானது, சிறியது முதல் பெரிய திட்டங்கள் வரை அனைத்தும் பொது பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

People will decide the political journey of Udayanidhi ... MK Stalin in a rage

இந்தத் தேர்தலில், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதன் மூலமும், அதிமுக மற்றும் அவர்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு கடுமையான தோல்வியைத் தருவதன் மூலமும் இதை ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வதை மக்கள் உறுதி செய்வார்கள்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios