புதிய வீடு கட்டும் பெரும்பாலானோர் வாஸ்து சாஸ்திரத்தின்படி தங்கள் வீட்டை கட்டி  அலங்கரிக்கின்றனர். அதேநேரத்தில் ஒரு புறம் அதை நம்பாதவர்களும் இருக்கின்றனர். வாஸ்து சாஸ்திரம் ஒரு வகையான ஆற்றலை கையாள்கிறது, வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாகவும் அது கருதப்படுகிறது என அதில் நம்பிக்கை உள்ளவர்கள் கருதுகின்றனர்.  வாஸ்துவை பொருத்தே அந்த வீட்டின் நன்மை தீமை அமைவதாகவும் நம்பப்படுகிறது, அதன்படி சில விதிகளை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிலைநாட்ட முடியுமென வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையுடையோர் கூறுகின்றனர். அந்த அடிப்படையில்  கீழ்க்காணும் 11 விஷயங்கள் தங்கள் வீடுகளில் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் அதன் படி 

தண்ணீர் மூழ்கும் படகு: 

படகு தண்ணீரில் மூழ்குவது போல எந்தப் படமும் வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்,  மூழ்கும் படகு சரிவின் அடையாளமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, வீட்டில் மூழ்குவது போன்ற படகின் ஓவியம் இடம் பெறுவதன் மூலம், வீட்டில் உள்ள உறுப்பினர்களிடையே இடைவெளி அதிகரிக்கத் தொடங்குகிறது என்றும், வீட்டில் அத்தகைய படங்கள் இருந்தால், அதை அகற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறது. 

காட்டு விலங்குகள் அல்லது பறவைகளின் ஓவியங்கள்

காட்டு விலங்குகள் அல்லது பறவைகளின் ஓவியங்கள் இடம் பெறுவதும் கூடாது என கூறப்படுகிறது,  குறிப்பாக  பன்றி, பாம்பு, கழுகு, ஆந்தை, வெளவால்கள், புறா, காகம் போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளின் சிற்பங்கள் அல்லது ஓவியங்களை வீட்டில் வைக்கக்கூடாது, காட்டு விலங்குகளின் படத்தை வைப்பதன் மூலம், வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மத்தியில் வன்முறை போக்கு நிலவும் என்றும் கூறப்படுகிறது. இந்த வகை  படங்களை வீட்டின் படுக்கையறையில் வைக்க வேண்டாம் எனவும் கூறப்படுகிறது. 

அதே போல் எதிர்மறையான புகைப்படங்கள் விட்டில் இடம்  பெறுவதை தவிர்க்கலாம் எனவும் கூறப்படுகிறது, சோகம் அல்லது சோகத்துடன் கூடிய ஓவியங்கள் அல்லது படங்களை வீட்டில் வைக்கக்கூடாது, வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, இதுபோன்ற ஓவியங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. 

புளிய மரம் மற்றும் மருதாணி செடிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது, காரணம், தீய சக்திகளில் அண்ட வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது. வீட்டைச் சுற்றி  அத்தகைய தாவரங்கள் இருக்கக்கூடாது. வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஏற்படுத்தும் என்கின்றனர்.  அதேபோல உலர்ந்த செடிகளையோ, பூக்களையோ வீட்டில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, உலர்ந்த பூக்கள் வீட்டிற்கு எதிர்மறை சக்தியைக் கொண்டு வருகின்றன. முள் மரங்களையும் வீட்டில் வளர்க்கக் கூடாது என்கின்றனர்.  கற்றாழை செடியை வீட்டில் வைக்கக்கூடாது. இது வணிகத்திற்கும் பண வளர்ச்சிக்கும் தடையாக அமையும் என கூறப்படுகிறது. 

உடைந்த கண்ணாடி உடைந்த படங்கள்:

உடைந்த கண்ணாடி அல்லது கடவுளின் உடைந்த படங்கள் வீட்டில் இருந்தால், அவற்றை உடனடியாக வீட்டிலிருந்து அகற்றவேண்டுமாம்,  இந்த விஷயங்கள் வீட்டிற்கு வறுமையை தரக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது. 

நடராஜர் சிலை: 

நாம் வணங்கும் நடராஜா சிலையும் கூடாது என்கின்றனர், நடராஜா என்பது நடனத்தின் ஒரு வடிவம். இருப்பினும், இது அழிவின் அடையாளமாகும். இது தந்தவா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, நட்ராஜின் ஷோபீஸ் அல்லது படத்தை வீட்டில் வைக்கக்கூடாது எனவும் வாஸ்து விவரப் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

 

தாஜ்மஹால் சிலை: 

இதே போல், தாஜ்மஹாலை ஒரு ஷோபீஸாகவோ அல்லது புகைப்படமாகவோ வீட்டில் வைக்கக்கூடாது, இது ஒரு கல்லறை மற்றும் மரணத்தை குறிக்கிறது என்பதால் மக்கள் இதை அன்பின் அடையாளமாகக் கருதலாம், ஆனால் உண்மையில் இது முகலாய பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஸின் கல்லறை. எனவே, இது மரணம் மற்றும் துக்கத்தின் அறிகுறியாகும். இது வீட்டில் எதிர்மறையான விளைவுகளைத் தருகிறது என்று நம்பப்படுகிறது.

 

போர் ஒவியங்கள்:

எந்தவொரு போரின் படங்களையும் வீட்டில் வைக்க கூடாது, பண்டைய காவியங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் போர் படங்களை வைக்க வாஸ்து சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. இதுபோன்ற படங்களிலிருந்து வீட்டின் உறுப்பினர்களிடையே வேறுபாடுகள் எழுகின்றன, மேலும் வீட்டில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.  அதேபோல்,  நீரூற்று அழகாக இருந்தாலும், அது வாஸ்து படி வீட்டிற்குள் இருக்கக்கூடாது. இது பண இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் வாஸ்துவில் நம்பப்படுகிறது.