Asianet News TamilAsianet News Tamil

TamilnaduFlood மக்களே விழிப்புடன் இருங்க.. வெளியே வராதீங்க.. தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

People stay alert.. tamilnadu governor rn.ravi requested
Author
Tamil Nadu, First Published Nov 10, 2021, 8:01 AM IST

கனமழை தொடர்வதால் அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க;- ஜெயலலிதாதான் முல்லைப் பெரியாறு காத்த அம்மணியா..? ஓபிஎஸ்ஸை டாராகக் கிழித்த துரைமுருகன்..!

People stay alert.. tamilnadu governor rn.ravi requested

இந்நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று சற்று குறைந்திருந்த மழை நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை இல்லையென்றாலும், விடாமல் பெய்து வருகிறது. இது பகலில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 24  மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து யாரால் முதல்வரானார் என்பது உலகிற்கே தெரியும்.. மீண்டும் சீனாக சீனுக்கு வரும் TTV.!

People stay alert.. tamilnadu governor rn.ravi requested

மேலும், மக்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை முன்னரே வாங்கி வைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

 

 

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின்  கனமழை முன்னறிவிப்பை அடுத்து, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசியமற்ற நடமாட்டம், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்குமாறும்  கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios