Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களே அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப எச்சரிக்கையா இருங்க.. இந்த மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுதாம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக 20.09.2021,  டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள்,

People of Tamil Nadu, be very careful for the next 4 days. Heavy Rain alert in those districts.
Author
Chennai, First Published Sep 20, 2021, 12:12 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக 20.09.2021,  டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், 21.09.2021: வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம்,  ஈரோடு, நாமக்கல்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

People of Tamil Nadu, be very careful for the next 4 days. Heavy Rain alert in those districts.

22.09.2021: வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

23.09.2021: டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

People of Tamil Nadu, be very careful for the next 4 days. Heavy Rain alert in those districts.

24.09.2021: டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios