வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (upper air circulation upto 1.5 km asl) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,  சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

08.01.2021 : ராமநாதபுரம், தூத்துக்குடி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

09.01.2021: : தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

10.01.2021: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி , கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும்  புதுச்சேரியில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

11.01.2021: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி , கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும்  புதுச்சேரியில் இடியுடன் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்) கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பதிவாகியுள்ளது. 


மூன்று மாவட்டங்களில் மிக கன மழையும், 13  மாவட்டங்களில்  கன மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக மே.மாத்தூர்  (கடலூர்), நத்தம் (திண்டுக்கல்) தலா 21 சென்டிமீட்டர் மழையும். ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 19 சென்டி மீட்டர் மழையும், வேப்பூர் (கடலூர்) 18 சென்டிமீட்டர் மழையும், கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி)16 சென்டி மீட்டர் மழையும்,  சங்கராபுரம்  (கள்ளக்குறிச்சி) 15 சென்டி மீட்டர் மழையும், பீளமேடு (கோவை) , குடவாசல்  (திருவாரூர்) தலா  11 சென்டி மீட்டர் மழையும், பூந்தமல்லீ   (திருவள்ளூர்) 10 சென்டி மீட்டர் மழையும், ஹரூர்  (தர்மபுரி),   அகரம்  சீகூர்  (பெரம்பலூர் ), ஜெயன்கொண்டம்  (அரியலூர்) , ராஜபாளையம்  (விருதுநகர்), ஆண்டிபட்டி  (தேனி) தலா 9 சென்டி மீட்டர் மழையும், திருவிடைமருதூர்  (தஞ்சாவூர்), தம்மம்பட்டி  (சேலம்) ,விழுப்புரம்( விழுப்புரம்) தலா  8 சென்டி மீட்டர் மழையும்,. புதுச்சேரி , பூண்டி (திருவள்ளூர்)அரவக்குறிச்சி  (கரூர் ) தலா 7 சென்டி மீட்டர் மழையும். பதிவாகி உள்ளது.