திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு தகர்ந்து விட்டது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்;- நாம் அனைவரும் மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன்களை தினசரி வழிபட்டு வருகிறோம். இந்து தெய்வங்களை கொச்சைபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் சம்பந்தம் இல்லை என இதுவரை ஸ்டாலின் வெளிப்படையாக கூறவில்லை. தாய்மையை சிலர் கேவலப்படுத்துகிறார்கள்.

அதற்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். தவறு செய்பவர்களை காப்பாற்றுவதுதான் அவரின் வேலை. ஆனால் பெண்களை போற்றுவது பாஜக. தெய்வமாக வழிபடும் சகோதரிகளை தவறாக பேசியோருக்கு பாடம் புகட்ட பெண்கள் காத்திருக்கின்றனர். பட்டியலின மக்களை கேவலப்படுத்தினாலும் ஸ்டாலின் கண்டிக்கமாட்டார். தாய்மார்களை, சகோதரிகளை கேவலப்படுத்தினாலும் ஸ்டாலின் கேட்கமாட்டார்.

ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் வெளியில் செல்ல முடியாது. நடமாட முடியாது. மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள். முன்னதாக 2021 சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. பாஜகவினரை சட்டமன்றத்துக்கு அனுப்பும் வேலையைத்தான் நான் செய்கிறேன் என்று  எல்.முருகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.