Asianet News TamilAsianet News Tamil

தடுப்பூசி போட்டுக்கொள்ள படையெடுக்கும் மக்கள்.. சொன்னதை நிறைவேற்றுமா மத்திய அரசு.

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது வரை 37 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

People invading to get vaccinated .. Will the central government fulfill what it said.
Author
Chennai, First Published Jul 22, 2021, 1:29 PM IST

தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர் , தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் இரண்டாம் அலை படிபடியாக குறைந்து வரும் நிலையில் கொரொனாவை முற்றிலுமாக குறைக்க தடுப்புசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே  தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது வரை 37 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. 

People invading to get vaccinated .. Will the central government fulfill what it said.

தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து தடுப்பூசிகளும் முற்றிலுமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 5.42 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது அதில் சென்னைக்கு 40,780 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் ஆன்லைன் மூலமும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் 100 தடுப்பூசி,  நேரடியாக வந்து தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 200 தடுப்பூசி என மொத்தமாக 300 தடுப்பூசி போடப்படுகிறது. 

People invading to get vaccinated .. Will the central government fulfill what it said.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம் தடுப்பூசி மையத்தில் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகிறார்கள். மேலும்,  தமிழகத்திற்கு தற்போது வரையிலும்  1,90,84,760 தடுப்பூசி வந்திருக்கும் நிலையில் நேற்று வரையும் 1,85,06,128 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 28 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios