தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வருவதற்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 14,300 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. விதிமுறைகள் அதிக கட்டுப்பாட்டுடன் இருந்ததால் மக்கள் அவசர காரியங்களுக்கு பிற மாவட்டங்களுக்கு செல்வதில் இ- பாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்தன. மேலும் இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பித்த உடனே இ-பாஸ் கிடைக்கும் நடைமுறை கடந்த 17ம் தேதி  முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வருவதற்கு நேற்று மட்டும் 14,300 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது