Asianet News TamilAsianet News Tamil

மக்களே அடுத்த 5 நாட்களுக்கு ரொம்ப எச்சரிக்கையா இருங்க.. இந்த 13 மாவட்டங்களில் பொளந்துகட்ட போகுது..!!

23.08.2021: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக (Many places) இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

People  be very careful for the next 5 days .. These 13 districts are going to be polluted .. !!
Author
Chennai, First Published Aug 19, 2021, 1:03 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 19.08.2021: நீலகிரி, கோயம்பத்தூர், வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 20.08.2021: நீலகிரி, கோயம்பத்தூர், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

People  be very careful for the next 5 days .. These 13 districts are going to be polluted .. !!

21.08.2021: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக (Many places) இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 
22.08.2021: திருச்சிராப்பள்ளி, மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக (Many places) இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

23.08.2021: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக (Many places) இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை  

People  be very careful for the next 5 days .. These 13 districts are going to be polluted .. !!

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26  டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26  டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios