கோயமுத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வை மையம் எச்சரித்துள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 31.07.2021,01.08.2021 நீலகிரி, கோயமுத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வை மையம் எச்சரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் 02.08.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03.08.2021,04.08.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையொட்டி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை : வங்க கடல் பகுதிகள்: 31.07.2021: தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.