நட்சத்திர பேச்சாளர்களால் அனல் பறக்கிறது இடைத்தேர்தல் பிரசாரம். பிரச்சாரத்தில் நடிகர் வருவதாலோ என்னவோ இவர்களுக்கும் கூட்டம் கூடுகிறது. 

இந்த வகையில் தான் திருப்பரங்குன்ற அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகர் கார்த்தி வந்தார். கார்த்திக் வருவதாக  என சொன்ன நேரம் மாலை 6 மணி ஆனால் வந்ததோ இரவு 8மணிக்கு. லேட்டா வந்த கார்த்தி கூடிய பொது மக்களிடம்“தமிழகத்தில் சிறப்பான இயக்கம்னா அது அ.தி.மு.கதான். அதனால்தான் இந்த இயக்கத்திற்காக உங்களை தேடி வாக்கு கேட்க வந்திருக்கிறேன். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி சிறப்பாக அமைந்திருக்கிறது. 

ஆகவே உங்கள் விலை மதிப்பில்லாத ஓட்டுகளை அ.தி.மு.கவிற்கு போடுங்கள் என ஐந்து நிமிடம் மட்டுமே பேசிவிட்டு நான் வரும் விமானம் தாமதமாக வந்தது அதனால்தான் இவ்வளவு லேட் மக்கள் என் மீது கோபப்பட வேண்டாம் என சாக்கு சொன்னார். 

இதனால் காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட தாய்மார்கள்  “என்னயா மனுசன் நீய்  சொன்னா சொன்ன நேரத்திற்கு வரணும் வீட்டுல புள்ள குட்டியெல்லாம் காத்து கிடக்கு வந்து சாக்கு சொல்ற’ என முணுப்போடு கலைந்து சென்றனர்.