Asianet News TamilAsianet News Tamil

மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை..

07.01.2021: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.01.2021: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

People Alert .. Rain with thunder and lightning in these 3 districts in the next 24 hours ..
Author
Chennai, First Published Jan 4, 2021, 3:07 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ( Esterly Waves) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

05.01.2021: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 

People Alert .. Rain with thunder and lightning in these 3 districts in the next 24 hours ..

06.01.2021, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

07.01.2021: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

08.01.2021: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

People Alert .. Rain with thunder and lightning in these 3 districts in the next 24 hours ..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். 

  People Alert .. Rain with thunder and lightning in these 3 districts in the next 24 hours ..

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 6 சென்டி மீட்டர் மழையும், அதிராமபட்டணம் (தஞ்சாவூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), அறந்தாங்கி  (புதுக்கோட்டை), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 4 சென்டிமீட்டர் மழையும், வேப்பூர் (கடலூர்), திருவாடானை (ராமநாதபுரம்), செய்யூர் (செங்கல்பட்டு), மணமேல்குடி  (புதுக்கோட்டை), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 3 சென்டிமீட்டர் மழையும், வந்தவாசி  (திருவண்ணாமலை), இல்லயான்குடி (சிவகங்கை), காரியாபட்டி  (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), ஜெயன்கொண்டம்  (அரியலூர்), கொடைக்கானல் தலா 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது .

 

Follow Us:
Download App:
  • android
  • ios