Asianet News TamilAsianet News Tamil

கந்த சஷ்டிக்கு கப்சிப்... காவிக்கு மட்டும் கதறலா..? பா.ரஞ்சித்தின் ஒருதலை பட்சத்திற்கு எதிர்ப்பு..!

கந்த சஷ்டி பிரச்சனை இந்து மக்களிடம் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து திமுக தனது நரித்தந்திரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. 

Peace to Kanda Sashti ... only to Kavi ..? Opposition to the one-sidedness of Pa. Ranjith
Author
Tamil Nadu, First Published Jul 17, 2020, 4:14 PM IST

கோவை மாவட்டம், சுந்தராபுரம் என்ற பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக அமைச்சர் ஜெயகுமார், பாஜக பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் உள்பட பலர் கண்டித்துள்ளனர்.Peace to Kanda Sashti ... only to Kavi ..? Opposition to the one-sidedness of Pa. Ranjith

இந்த நிலையில் அவ்வப்போது தனது டுவிட்டரில் சமூகத்தில் நடைபெறும் அவலங்கள் குறித்து குரல் கொடுத்துவரும் இயக்குனர் பா.ரஞ்சித் இதுகுறித்து, 
’’தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்ப்போரை பொது சமூகத்திற்க்கு எதிரியாக மாற்றுதல், அழித்தொழித்தல் என தங்கள் வேலைத்திட்டத்தை மத உணர்வை தூண்டி செயல்படுத்தி கொள்கிறார்கள்! விழிப்படைவோம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார். Peace to Kanda Sashti ... only to Kavi ..? Opposition to the one-sidedness of Pa. Ranjith

கந்த சஷ்டி பிரச்சனை இந்து மக்களிடம் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து திமுக தனது நரித்தந்திரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. ஈவெரா சிலைமீது காவி பொடியைத் தூவி திமுக கொச்சைப்படுத்தி உள்ளது என்றும் முருகப்பெருமானை இழிவுபடுத்தும்போது வாயை திறக்காமல் இருந்து விட்டு இப்போது மட்டும் கருத்து சொல்வது எப்படி பா.ரஞ்சித் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios