அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டிக்கு, நள்ளிரவு நேரத்தில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவராக இருந்து வருபவர் டாக்டர் பிரதாப் ரெட்டி. இவருக்கு நேற்று நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏன்பட்டழ. இதனால் மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதற்கட்டமாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்  விஐபிக்கள்  அனுமதிக்கப்படும் வார்டில், அவர் தொடர்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதே அப்பல்லோ மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.