ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் வரும் 30ஆம் தேதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது.


இந்த நிகழ்ச்சியான அரசு விழா என்பதால் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த அலைகடலாக திரண்டு வருவார்கள். அதற்கான ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு நடத்தினார்.. இந்த ஆய்வில் வருவாய், உள்ளாட்சி துறை, பொதுப்பணி, காவல்துறை, பேரூராட்சி அதிகாரிகள் கலந்தகொண்டு தேவர் நினைவிடம் அமைந்துள்ள பகுதிகளில், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் பாதைகளில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 செய்தியாளர்களிடம பேசிய கலெக்டர் வீரராகவராவ்,
'முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், வெளி மாவட்டத்தில் இருந்து அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட அனுமதி பெற்று வர வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.