கட்சி விதிகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவை அல்ல! இதில் நீதிமன்றம் தலையிட முடியாது! இபிஎஸ் தரப்பு வாதம்..!

அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் ஏற்படும். ஆகையால், இதில், நீதிமன்றம் தலையிடக் கூடாது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு 75 மாவட்ட செயலாளர்களில் 20 பேர் இபிஎஸ்க்கு முன்மொழிந்த நிலையில் மீதம் 55 பேர் உள்ளனர். 

Party rules are not written in inscriptions! EPS side argument

ஒருங்கிணைப்பாளராக இருந்த போது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் எந்த விளக்கமும் கேட்காமல் தன் சொந்த தம்பி ராஜாவை கட்சியை விட்டு நீக்கி ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்தார். அதே நடைமுறை தான் அவரது நீக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள்  6வது நாளாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்;- எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அங்கீகரித்து அவைத் தலைவர் கையெழுத்திட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததால் பொதுக்குழுவின் அதிகாரத்தை பற்றி சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. 

இதையும் படிங்க;- தினகரன் என்ன சட்ட வல்லுனரா? ஓபிஎஸ் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்கு தான்.. ஜெயக்குமார்.!

Party rules are not written in inscriptions! EPS side argument

ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருகிறார். கட்சி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி கட்சி நிர்வாகிகளையும் நீக்கி வருகிறார். இந்த வழக்கில் முடிவு வரும் வரை எந்த நடவடிக்கையும் வேண்டாம் என தவிர்த்து வருகிறோம். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் ஏற்படும். ஆகையால், இதில், நீதிமன்றம் தலையிடக் கூடாது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு 75 மாவட்ட செயலாளர்களில் 20 பேர் இபிஎஸ்க்கு முன்மொழிந்த நிலையில் மீதம் 55 பேர் உள்ளனர். 

Party rules are not written in inscriptions! EPS side argument

ஆனால் ஓபிஎஸ்க்கு 95 சதவீதம் பேர் எதிராக உள்ளதால் அவரால் போட்டியிட முடியவில்லை. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஒருங்கிணைப்பாளர் மீது எவரும் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். ஆனால் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் உள்ளது என வாதிட்டார். மேலும், கட்சி விதிகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவை அல்ல. காலமாற்றத்துக்கு ஏற்ப கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஒருங்கிணைப்பாளராக இருந்த போது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் எந்த விளக்கமும் கேட்காமல் தன் சொந்த தம்பி ராஜாவை கட்சியை விட்டு நீக்கி ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்தார். அதே நடைமுறை தான் அவரது நீக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்! அதிமுக - பாஜக ஷாக் !!

Party rules are not written in inscriptions! EPS side argument

பொதுச்செயலாளர் தேர்தலில் தகுதியானவர்கள் போட்டியிட வழிவகை செய்யவே, 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கட்சி விதிப்படியே ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் என இபிஎஸ் தரப்பு வாதத்தை நிறைவு செய்தது. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு பதில் வாதத்துக்காக விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios