தேர்தலில் நிற்பது கலைஞர் என எண்ணி செயலாற்ற வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நிற்பதாக நினைத்து அனைவரும் செயலாற்ற வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுரை வழங்கி உள்ளார்.

party president mk stalin only the decision authority of seat sharing for alliance parties says dmk minister anbil mahesh in trichy vel

திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு மனிதர்கள் பங்கேற்கும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பன்னாட்டு கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வல்லுனர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்தரங்கை வழங்க உள்ளனர்.

மக்களை வடக்கு, தெற்கு என பிரிக்காமல் பூங்கொத்தின் மலர்களை போல பாஜக அனைவரையும் ஒன்றிணைக்கிறது - வானதி சீனிவாசன்

அதில் என்னுடைய முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வு கட்டுரையும் சமர்ப்பிக்க உள்ளேன். மேலும் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களை சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்று இந்த கருத்தரங்கம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பிக்கும் ஒன்றாக இருக்கும். இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும், எனக்கும், உதயநிதி ஸ்டாலின் மூலம் எங்களுக்கும் கிடைத்த அருமையான அண்ணன். நேரடியாக பேசும் போதும் அன்பாக பேசக்கூடியவர் தான். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின் கட்சியின் பெயரில் இல்லாதது குறித்த கேள்விக்கு, "கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம். கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம். அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும் போது, அவர்களது நோக்கம் என்னவென்று தெரியவரும் என்றார்.

பகலில் போலீஸ் வேலை, இரவில் செயின் பறிப்பு; பொள்ளாச்சியில் தலைமை காவலர் அதிரடி கைது

மேலும் திமுகவில் தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இவருக்கு சீட்டு கொடு, அவருக்கு சீட்டு கொடு, இந்த கூட்டணிக்கு சீட்டு கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிற்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் என எண்ணி செயலாற்ற வேண்டும் தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார்.

ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆலோசனை செய்து வருகிறோம். அதன்பிறகே மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும்  என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios