டாஸ்மாக் திறக்க டெல்லிக்கு படையெழுத்த  எடப்பாடிபழனிச்சாமியை ட்விட்டரில்  கழுவிகழுவி ஊற்றும்ட்தமிழ்நாட்டு கட்சித் தலைவர்கள்.டாஸ்மாக் திறந்த இரண்டே நாளில் தமிழகத்தில் குடிமகன்களின் கூத்துக்கள் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

மக்களின் ஆதரவை பெறுவது ரெம்ப சிரமம் என்பது அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒருநாள் கூட இந்த அரசு நிலைக்காது என்று சொன்னவர்கள் மத்தியில் 5ஆண்டுகளை கடந்து போக இருக்கும் காலத்தில் எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் வேளாண்மண்டலம் உள்ளிட்ட சில திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்  மக்கள் விரும்பாத டாஸ்மாக் கடைகளை அதுவும் ஊரடங்கு முடிவதற்குள் கொண்டு வர துடிப்பதும் அதற்கு உயர்நீதிமன்றம் தடை போட்டது. அந்த தடையை உடைக்க டெல்லிக்கு படையெடுத்து உச்சநீதிமன்றம் சென்றதும் எடப்பாடிக்கு சறுக்கலாகவே அமைந்திருக்கிறது. இந்த நடவடிக்கையை  திமுக பாமக விசிக  மநீம தேமுதிக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவர்கள் ட்விட்டரில் என்ன மாதிரி கழுவி ஊற்றியிருக்கிறார்கள் என்பதற்கான லிங் கீழே....