பாஜக கூட்டணியில் இருந்து வந்த ஐஜேகே திடீரென திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி உடன்பாடு செய்து கொண்டார்.

 

இந்நிலையில் திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என விளக்கமளித்துள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், ’’அதிமுக -பாஜக கூட்டணியில் பாமக இருப்பதால் அந்த கூட்டணியில் தொடரமுடியவில்லை. மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினால்தான் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லாமல் போனதற்கான காரணம் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கும்.

அந்த கூட்டணியில் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த, இம்சித்துக் கொண்டிருந்த, தனிப்பட்ட முறையில், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்திற்கும் தொந்தரவு கொடுத்த பாமக இருப்பதால், நாங்கள் பாஜக- அதிமுக கூட்டணியில் தொடரமுடியாது,'' என அவர் தெரிவித்தார்.