ADMK Party administrators are demands TTV Dinakaran
இடைத்தேர்தல் வரலாற்றில் முதல் முதலாக திருமங்கலத்தில் 'விட்டமின் ப' பார்முலாவை அறிமுகம் செய்துவைத்து திமுக. இடைத்தேர்தல் என்றாலே திருமங்கலம் தான் ஞாபகத்துக்கு வரும் ஆனால் திருமங்கலம் என்ற பெயரை திருத்தி எழுத களமிறங்கினார் ''அதிமுக அம்மா கட்சி'' வேட்பாளர் தினகரன்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இது குறித்த ஆவணங்கள் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது.
இதையடுத்து இன்று நடைப்பெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை வரும் 17ஆம் தேதி நடைப்பெற உள்ளது.
இந்த விசாரணையில் தமிழகத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரின் கையெழுத்தை பெற்று பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என தினகரன் ரகசிய உத்தரவிட்டு இருந்தார். இந்த பணியில் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கிளை, ஒன்றியம், வட்டம் உள்ளிட்ட நிர்வாகிகள் கையெழுத்து போட பணம் கேட்டுள்ளனர். கட்சியை காப்பாத்தணும்னு எங்கள் கையெழுத்து கேட்டு வருகிறீர்கள், மற்ற நேரங்களில் உதவின்னு கேட்டு வந்தால் கூட திருப்பி அனுப்பி விடுகிறீர்கள்.
அதனால் கையெழுத்து போட பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர் அடிமட்ட நிர்வாகிகளின் இந்த அதிரடியால் மாவட்ட நிர்வாகிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
நிர்வாகிகளின் பதவிக்கு ஏற்ப தொகை வழங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டு வருகிறதாம். இதனால் தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். கடைசி நேரம் என்பதாலும், கையெழுத்து பெறப்பட வேண்டும் என்பதாலும் கேட்கும் பணத்தை கொடுத்து கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
