Asianet News TamilAsianet News Tamil

நம்பி வந்த 10 எம்.பி.,களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு மகனுக்கு மட்டும் சீட் வாங்கிய ஓபிஎஸ்... கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!

மக்களவை தேர்தலில் அதிமுகவில் மகனுக்கு ஒரு சீட் வாங்கி கொடுத்துவிட்டு தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டார் என ஓபிஎஸ் மீது அவரது ஆதரவாளர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

parliment election...OPS   dropped the supporters
Author
Tamil Nadu, First Published Mar 19, 2019, 4:59 PM IST

மக்களவை தேர்தலில் அதிமுகவில் மகனுக்கு ஒரு சீட் வாங்கி கொடுத்துவிட்டு தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டார் என ஓபிஎஸ் மீது அவரது ஆதரவாளர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

உடல்நிலை பாதிக்கப்பட்டு 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக கோரி சசிகலா தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதில் கடும் மனஉளைச்சலில் இருந்த ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

parliment election...OPS   dropped the supporters

இதனையடுத்து ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ‘தர்மயுத்தம்’ தொடங்கினார். அப்போது அவருக்கு அதிமுக எம்.பி.க்கள் 10 ஆதரவு அளித்தனர். பின்னர் முதல்வர் பதவி ஆசையில் இருந்து வந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு அவரது தலையெழுத்தை மாற்றியது. இதனையடுத்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டார்.

பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஒன்று சேர்ந்தது. ஓபிஎஸ் துணை முதல்வர் வாங்கப்பட்டது. அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டன. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு மொத்தமாக கழட்டிவிடப்பட்டது. இதையடுத்து சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. ஆனால், இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது. பின்னர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ். இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் இருந்து வந்தனர். அதிமுக கட்சியில் ஓபிஎஸ் முக்கிய பதவி வகித்து வந்த போதும் தனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட அளவில் கூட பதவி வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்த வந்தார். parliment election...OPS   dropped the supporters

இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் சுந்தரம் (நாமக்கல்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), சத்தியபாமா (திருப்பூர்), வனரோஜா (திரு வண்ணாமலை), கோபாலகிருஷ்ணன் (மதுரை), செங்குட்டுவன் (வேலூர்), மருத ராஜா (பெரம்பலூர்), ஜெயசிங் தியாக ராஜ நட்டர்ஜி (தூத்துக்குடி), பார்த்திபன் (தேனி) உள்ளிட்ட 10 பேரில் ஒருவருக்குகூட மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. parliment election...OPS   dropped the supporters

ஓபிஎஸ் தனது மகனுக்கு சீட் கிடைத்தால் போதும் என்று, ஆதரவாளர்களை கைவிட்டுவிட்டார். ஓபிஎஸ்ஸை இன்னமும் விட்டுக் கொடுக்காத அவரது ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, திருநெல்வேலியில் மனோஜ்பாண்டியனுக்கும், கிருஷ்ணகிரியில் முனுசாமிக்கு சீட் வாங்கி கொடுத்துள்ளார் என்று கூறி தனக்குதானே ஆறுதல் கூறிக்கொள்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios