Asianet News TamilAsianet News Tamil

தேர்தலில் போட்டியிட வெளிநபர்களுக்கு வாய்ப்பு... கலகலக்கும் கமல் கட்சி..!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ரசிகர் மன்றத்தினரை தவிர வெளிநபர்களுக்கு சீட் கொடுக்கப் பட்டதால் மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் பலர் எரிச்சலில் உள்ளனர்.

Parliment election... Kamal Party
Author
Tamil Nadu, First Published Mar 27, 2019, 10:23 AM IST

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ரசிகர் மன்றத்தினரை தவிர வெளிநபர்களுக்கு சீட் கொடுக்கப் பட்டதால் மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் பலர் எரிச்சலில் உள்ளனர்.

நடிகர் கமல் தனது மக்கள் நீதி மையம் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இரண்டு கட்டமாக வெளியிட்டார். முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான போது தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி கடலூர் மாவட்ட மக்கள் நீதி மையம் பொறுப்பாளர் குமரவேல் விலகினார். இந்த நிலையில் பொள்ளாச்சி மாவட்ட மக்கள் நீதி மையம் பொறுப்பாளர் வெங்கடேசனும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். Parliment election... Kamal Party

விலகலுக்கான காரணம் என்று கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சரி திருப்பூர் மாவட்ட பொறுப்பாளரும் சரி ஒரே காரணத்தால்தான் கூறியுள்ளனர். கட்சித் தலைமை கட்சிக்கு உழைப்பவர்களை விடுத்து வெளிநபர்களுக்கு வாய்ப்புள்ளதாகவும் நீண்ட நாட்களாக ரசிகர் மன்றத்திற்கும் கட்சிக்கும் உழைத்தவர்களுக்கு கமல் வாய்ப்பளிக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளனர். Parliment election... Kamal Party

அதிலும் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசனும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய தயாராக இருந்ததாகவும் அது எப்படி என்கிற விவரத்தை தலைமையிடம் கூறியும் தனக்கு வாய்ப்பளிக்க வில்லை என்று வேதனை தெரிவித்து மக்கள் நீதி மையத்தில் இருந்து வெளியேறியுள்ளார். திருப்பூர் தொகுதியில் தனக்கு யார் என்றே தெரியாத அதாவது மாவட்ட பொறுப்பாளராக தனக்கே யாரென்று தெரியாத சந்திரகாந்த் என்பவரை கமல் வேட்பாளராக அறிவித்துள்ளது எப்படி நியாயம் என்றும் வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகலுக்கான காரணம் குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் வாய் திறக்க மறுத்து விட்டனர். அதே சமயம் கமல் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வாய்திறந்து வண்டி வண்டியாக பேசுகின்றனர். திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக இளைஞர்கள் தற்போது கமலின் மக்கள் நீதி மையம் கட்சியைப் பார்த்து வருவதாக அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர். மக்கள் நீதி மையம் என்கிற பெயரிலேயே ஒரு நேர்மை இருப்பதால் இளைஞர்களில் ஒரு பகுதியினர் தங்களை நிச்சயமாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை கமல் கட்சி தேர்தலில் நிற்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். Parliment election... Kamal Party

எனவே வெற்றி பெற முடியவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று பலத்தைக் காட்டி அடுத்த தேர்தலில் கூட்டணி நேரத்தை உருவாக்கலாம் என்பது கமலின் திட்டம் என்றும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் தேர்தலில் நிற்க வேண்டும் மக்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் ரசிகர் மன்றத்துக்கு தொடர்பே இல்லாத தொழிலதிபர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள் நிதி நிறுவன அதிபர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாய்ப்பு உள்ளதாக புகார் கூறுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலமும் துணைத்தலைவர் மகேந்திரனும் தான் என்று மாவட்ட நிர்வாகிகள் புலம்புகின்றனர். இவர்கள் இருவர் கூறுவதைக் கேட்டு தான் கமல் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும் இதனை பயன்படுத்தி அருணாசலமும் மகேந்திரனும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் வாங்கி கொடுத்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இதேக் குற்றச்சாட்டை தான் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக வெங்கடேசனும் தெரிவித்துள்ளார். Parliment election... Kamal Party

மகேந்திரனும் சரி அருணாச்சலமும் சரி அவர்கள் சரியானவர்கள் இல்லை இது தெரியாமல் கமல் அவர்கள் கூறுவதை கேட்டுகொண்டு நடந்து கொள்வதாகவும் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வு பிரச்சனையால் கமல் கட்சியில் கலகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்தடுத்து இந்த கலகலப்பு சலசலப்பு மாறி மோதலாகவும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் கட்சியில் உள்ள நிர்வாகிகளே.

Follow Us:
Download App:
  • android
  • ios