* த.மா.கா.வின் தேர்தல் அறிக்கையானது வளமான தமிழகம்! வலிமையான பாரதம்! என்றிருக்கும். எங்களுக்கான தொகுதி எது? என்று இன்னும் சில நாட்களில் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்: ஜி.கே.வாசன். (த.மா.கா. தனி தேர்தல் அறிக்கை வேற விடுமாண்ணே? ஆனா ஒண்ணுண்ணே, சிரிக்காம ஜோக்கடிக்கிறதுக்கும் ஒரு தகிரியம் வேணும்னே, அது ஒங்ககிட்ட நெறய கொட்டிக் கெடக்கு. இந்த திறமைய நாங்களும் கத்துக்கிடணும்ணே, கத்துக்கிடணும்.)

* இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலானது பாசிச பா.ஜ.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இடையில் நடைபெறும் தேசபக்த யுத்தமாகும். இதில் நாட்டு மக்கள் தரப்பு வெற்றி பெறுவது உறுதி! உறுதி!: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன். (சரி தலைவரே அதெல்லாம் கெடக்கட்டும். உங்க ரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நாலில் மூணு வேட்பாளர்கள் செம வயசானவங்க. அதனால பிரசாரத்துக்க் போறதுக்கு முன்னாடி பிரஷர் மாத்திர,  சுகர் மாத்திரையெல்லாம் போட்டுக்க சொல்லுங்க. அடிக்கடி அவங்களோட பேரக்குழந்தைங்களை போன் போட்டு ‘தாத்தாட்ட பேசணும்’ன்னு டார்ச்சர் பண்ண கூடாதுன்னும் கண்டிப்பா சொல்லிடுங்க. இல்லேன்னா கூட்டணி கட்சி தலைவர்கள் காண்டாகிடுவாய்ங்க.)

* பொள்ளாச்சி விவகாரத்தால் பெண்ணைப் பெற்ற அனைவருக்கும் பதறுகிறது. ஆனால் உங்களுக்கு பதறவில்லையா மிஸ்டர் சி.எம்.?: கமல்ஹாசன். (கரீக்ட்டா கேட்டீங்க தல. அது கெடக்கட்டும், அ.தி.மு.க. நிர்வாகிங்க கேக்குற கேள்வி முதல்ல உங்க காதுல கேக்குதா?...’வாணி கணபதி, சரிகா, கவுதமின்னு மற்றும் இடையில் இன்னும் சிலரோட அப்பா-அம்மாக்கள் பதறியது உங்கள் கண்ணில் விழலையா மிஸ்டர் கமல்? அதுவும் கெடக்கட்டும் விடுங்க, சமீபத்துல உங்க ரெண்டாவது பொண்ணோட அந்தரங்க செல்ஃபிக்கள் இணையத்துல வைரலாச்சே! வளர்ந்த பெண் பிள்ளைகள் நமக்கு இருக்குதே, அதுங்களுக்கு நல்ல ரோல்மாடலா நாம இல்லாம போனதாலேதானே இதெல்லாம் நடக்குது!ன்னு உங்களுக்கு பதற்றம் வரலையா மிஸ்டர் கமல்?)

* 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எங்கள் அணி. அகில இந்திய அளவிலும் நாங்கள் பலம் பெற அ.தி.மு.க.வின் பங்கு  பெரிதாய் இருக்கும். அதேபோல் நடைபெறும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற நாங்கள் உதவிகரமாக இருப்போம்: பியூஸ் கோயல். (பாக்குறதுக்கு அழகா, அருமையா ஜம்முன்னு இருக்கீக கோயல். ஆனா தமிழக பொறுப்பை ஏத்துக்கிட்ட பிறகு உங்க பேச்சு, வழக்கு எதுவுமே சரியில்லை! ஏதோ அ.தி.மு.க.வுக்கு அகில இந்திய தேசிய செயலாளர் மாதிரியில்ல ஸ்டேட்மெண்டு கொடுக்குறீக?)

* ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவர். அவர் எங்காவது இருக்கட்டும், எந்த வியூகத்தையாவது அமைக்கட்டும். ஆனால் வைகோவின் நாடாளுமன்ற சேவை, தமிழகத்துக்கு தேவை: தமிழருவி மணியன். (ரைட்டு  அருவி மறுபடியும் கலிங்கப்பட்டி பக்கம் பார்த்து பாய ஆரம்பிச்சிடுச்சு. போயஸ்கார்டனின் சூப்பர்ஸ்டார் மலையில பெருசா ரெஸ்பான்ஸ் இல்ல போலிருக்குது. அதான் மறுபடியும் தடம் மாறுது அருவித்தண்ணி!)