Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்ற தேர்தல்! காங்கிரசுக்கு வெறும் 78 இடங்கள் தான்! வெளியானது புதிய கருத்துக்கணிப்பு!

2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெறும் 78  இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று புதிய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. உடோபியா கன்சல்டிங் மற்றும் வார் ரூம் ஸ்டேட்டர்ஜி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் 156 மக்களவை தொகுதிகளில் சுமார் 13 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Parliamentary election! Congress is just 78 seats won
Author
Delhi, First Published Aug 16, 2018, 1:56 PM IST

2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெறும் 78  இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று புதிய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. உடோபியா கன்சல்டிங் மற்றும் வார் ரூம் ஸ்டேட்டர்ஜி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் 156 மக்களவை தொகுதிகளில் சுமார் 13 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி உத்தரபிரதேசத்தில் கடந்த முறை 71 இடங்களில் வென்ற பா.ஜ.க வரும் தேர்தலில் 49 இடங்களை மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.Parliamentary election! Congress is just 78 seats won

ஒட்டு மொத்தமாக பார்க்கையில் பா.ஜ.க.வால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 227 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியாலும் 100 இடங்களை கூட தாண்ட முடியாத என்றும் வெறும் 78 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியும் என்றும் கருத்துக் கணிப்பு சொல்கிறது. Parliamentary election! Congress is just 78 seats won

தற்போது தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க தனித்து ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் கூட்டணி அரசை அமைக்க முடியும் என்று இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதே சமயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க போன்ற மாநில கட்சிகள் தான் சவாலாக இருக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.Parliamentary election! Congress is just 78 seats won

எது எப்படியோ காங்கிரஸ் கட்சியால் 78 இடங்களை கூட தாண்ட முடியாது என்கிற கணிப்பு பா.ஜ.கவிற்கு சாதகமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து மோடியும் – அமித் ஷாவும் எப்படி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios