அதிமுகவில் சசிகலா – ஓபிஎஸ் என இருதரப்பின் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் அதிமுகவினர் எந்த தரப்பை சேர்ந்தவர்கள் என தெரியாத நிலை நீடித்து வருகிறது.

நேற்று முன்தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 100க்கு மேற்பட்ட எம்எல்ஏக்கள் க லந்து கொண்டனர். பின்னர், அவர்கள் அனைவரையும், புறநகர் பகுதியான கல்பாக்கம் அருகே தனியார் ரிசர்ட்டில் சிறை வைத்துள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோருடன், சிறை பிடிக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்பது, ஜெயலலிதா வாழ்ந்து வந்த, தற்போது சசிகலா வசித்து வரும் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை உடனடியாக மீட்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற இவை அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட அதிமுக எம்பிக்கள், எங்கள் கட்சியை சேர்ந்த மைத்ரேயன், சத்யபாமா உள்பட 49 பேரில், 15 பேர் வரவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.