* கொடநாடு விவகார ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக என்னை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து மிரட்டுகிறார்கள்: மேத்யூ சாமுவேல். (ப்ரோ! நீங்க அந்தப் படத்தை சேனல்ஸ்ல வெளியிடாம டைரக்டா  ஃபேஸ்புக்குல போட்டிருந்தீங்கன்னா, லைக்ஸ் அள்ளியிருக்கலாம். ரூட்டு புரியாம போனது உங்க தப்பு.)

* துணை முதல்வரின் அறை வாஸ்துப்படி மாற்றப்பட்டுள்ளது. பழைய நிலை போல் அவரது அறைக்குள் நுழையும் முன் இருந்த சிறிய ஹால் இப்போது இல்லை. நேரடியாக தன் அறைக்குள் அவரால் நுழைய முடியும்!: செய்தி. (ஸ்ட்ரெயிட்டா எங்கேயோ நுழையுறதுக்கு இந்த யாகத்தையும் நடத்தி வாஸ்துப்படி எல்லாத்தையும் மாத்தியிருக்கார்!ன்னு கோட்டை கேண்டீன்ல கிசுகிசுக்கிறாங்களே, அது உண்மையா?)

* அ.தி.மு.க.வை அடிமையாக்க பா.ஜ.க. நினைக்கிறது என்றுதான் தம்பிதுரை சொல்லியிருக்கிறார். அடிமையாகிவிட்டது என்று சொல்லவில்லை!: ஜெயக்குமார். 
(பூவை பூன்னும் சொல்லலாம், புய்ப்பமுன்னும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் தல. எப்படி சுத்துனாலும் மேட்டரு அதுதானே!)

* முதல்வராக வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தியிருக்கலாம், கோப்புகளை எரிப்பதற்காக யாகம் நடத்தியிருக்கலாம். கோட்டையில் யாகம் நடத்தியது ஏன்? என்று ஓ.பி.எஸ். சொல்லியே ஆக வேண்டும்: ஸ்டாலின். (யண்ணே நீங்க கேட்கிறது ஒருவிதத்துல நியாயம்தான். ஆனாலும் உங்க ‘ஹோம் மினிஸ்டர்’ அப்பப்ப கோயில்களில் யாகம்,  திடீர் பூஜை, சிறப்பு யாகம்ன்னு பண்றதுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துட்டா இருக்கிறாங்க?ன்னு ஊர் கேக்குதே.)

* எதிகட்சிகளின் மெகா கூட்டணி ஊழல் நிறைந்தது. எதிர்மறையானது மற்றும் நிலையற்றது. அவர்களிடம் பண பலம் இருக்கலாம், ஆனால் நம்மிடம் மக்கள் பலம் உள்ளது: நரேந்திர மோடி. (தல, அந்த மக்களே பணமில்லாமதான் பராரியா திரிஞ்சுட்டு இருக்கிறாய்ங்க. நீங்க போட்டு விடுறதா சொன்ன பதினஞ்சு லட்சத்துக்கு எத்தனை சைபர்ன்னு இன்னும் கூட்டிக்கினு ஒக்காந்திருக்கிற பயலுவல போயி உங்களுக்கு பலம்னு சொல்றீயளே? இது நியாயமாரே?)