* தேர்தலில் நிற்ககூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இவர்களே என்னை சீண்டி சீண்டி நிற்க வைத்துவிடுகிறார்கள்!: என்று விஷால் நிஜத்திலும் பஞ்ச் அடித்திருக்கிறார். (நில்லுங்க, அட நில்லுங்க தல யார் வேண்டாம்னது!? ஆர்யா, கார்த்தி, வரலெட்சுமி இவிய்ங்க மூணு பேர் மட்டும் ஓட்டுப் போட்டாலே நீங்க எம்.எல்.ஏ. ஆகிடுவீங்களா!?)

* ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிரதமர் மோடியை காங்கிரஸ் எழுப்பிவிட்டது: என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டலடித்திருக்கிறார். (பின்ன, வசூல்ராஜா கமல் மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு போயி கட்டிப்பிடிச்சா யாருக்கு வேணா முழிப்பு வரத்தானுங்க செய்யும். சரி சரி எழுப்பிடீங்க, அப்டியே உங்க கையால சூடா ஒரு கப் பில்டர் காஃபியும் கொடுத்துடுங்க. தல ஃப்ரெஷ் ஆகிடுவாப்ல.)

* தமிழகத்தில் மக்கள் நலனை சார்ந்த அரசியலை விட மோடி எதிர்ப்பு அரசியல் அதிகமாக உள்ளது!: என்று தமிழிசை செளந்திரராஜன் கோபப்பட்டுள்ளார். 
(க்கும், இத கண்டுபிடிக்கவே உங்களுக்கு நாலரை வருஷத்துக்கு மேலே ஆகியிருக்குதுங்ளே! உங்க டீமை வெச்சு எங்கே போயி தாமரை மொட்டுவிட்டு, மலர்ந்து, மந்தகாசமா ஒளிர?)

* தமிழ்நாட்டில் திரைத்துறையினருக்கு கருத்துச்சுதந்திரம் இல்லை. திரைப்படங்களை வெளிவரவிடாமல் தடுக்கும் போக்கிற்கு என் படம் தான் ஆரம்பவிழாவாக அமைந்தது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்: என்று கமல் நொந்துள்ளார். (தல உங்க படம்தான் வெற்றிகரமா ஓடலை. அட்லீஸ்ட் இந்த விஷயத்துக்காகவாச்சும் ஒரு சக்ஸஸ் பார்ட்டி ரெடி பண்ணுங்க. ஆளாளை அழைச்சு அதகளம் பண்ணிடுவோம்.)

* அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா டி.டி.வி. அணியில் ஐக்கியமாக திட்டம்: செய்தி. (தினகரன் மேலே இருக்கிற பகையை தீர்த்துக்க இதைவிட்டா வேற வாய்ப்பே பன்னீருக்கு கிடைக்காது. அவரே தம்பியை கூட்டிட்டு போயி அங்கே அட்மிஷன் போட்டுடலாம். ஓ.ராஜா கொடுக்குற குடைச்சல்ல கூல் தினகரன் கொழாப்புட்டாட்டமா வெந்து நொந்து டென்ஷனாகிடுவாரு.)