தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, பரவி வரும் டெங்கு, நீட் தேர்வு போன்றவற்றைக் கண்டித்து சென்னையில் வரும் 10 வரும் ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், டெங்கு  காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இதே போல நீட் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பதக செயல்படவில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே நேற்ற செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தமிழக அரசு என்றாலே ஊழல் அரசு என மக்கள் கருதுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் முதன்முறையாக ஓபிஎஸ் அணியினர் தமிழக அரசை எதிர்த்து களம் இறங்குகின்றனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்தக் கோரியும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும்  சென்னையில் வரும் 10 வரும் ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் தொடரும் எனவும் ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.