ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்தபோது அவர் விலக வேண்டிய நிலை ஏற்பட்ட போது, இரண்டு முறை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட்டவர் ஓபிஎஸ். இதை ஜெயலலிதாவே விரும்பி ஓபிஎஸ்சிடம் ஒப்படைத்தார்.

ஜெயலலிதா மீண்டும் வழக்குகளில் இருந்து விடுபட்டபோது, அவரது விருப்பப்படி முதலமைச்சர் பதவியை மீண்டும் ஒப்படைத்தார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்தவர் ஓபிஎஸ்.

ஜெயலலிதா இறந்துபோன போது ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக்கப்பட்டார். இதனையடுத்து ஓபிஎஸ்ன் செயல்பாடுகள் அனைத்தும் மிகுந்த பாராட்டடைப் பெற்றன.

இதற்கு பின்னர் தான் பிரச்சனை தொடங்கியது.சசிகலா பொதுச்செய்லாளர் ஆனதில் இருந்து ஓபிஎஸ்க்கு தொடர்ந்து டார்ச்சர் வர அவரால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது பின்னர் நடைபெற்ற அதிகாரச் சண்டையில் ஓபிஎஸ் பதவி இழந்தார்.

ஆனாலும் ஓபிஎஸ்க்கு பொது மக்களிடையே செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ், அம்மா இறந்த பிறகு, தனக்கு முதலமைச்சராக விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

அம்மாவே உயிருடன் இல்லாத போது, நான் ஏன் முதலமைச்சராக வேண்டும் என்று எண்ணியதாக தெரிவித்தார்.

அந்த சூழ்நிலையில் என்னுடைய விருப்பம் இல்லாமல் நான் முதலமைச்சராக்கப்பட்டேன் என்றும் தெரிவித்தார்.

எனக்கு இந்த முதலமைச்சர் பதவி பெரிதில்லை, எனக்கு பதவியை துறந்து சமூக சேவை செய்யவே விருப்பம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.