மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்திலிருந்து டெல்லி வந்த ஓ.பி.எஸ்சை சந்திக்க மறுத்துவிட்டு மைத்ரேயன் மற்றும் சத்யபாமா மட்டும் சந்தித்தது ஏன்? துணைமுதல்வருக்கு ஏற்பட்ட இந்த அவமானம் எதற்கு?  என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் அவசர அவசரமாக டெல்லி கிளம்பிச் சென்ற துணைமுதல்வர். டெல்லி பயணத்துக்கு பன்னீர் சில காரணங்களைச் சொன்னாலும், நிஜமான காரணம் பிஜேபி தலைவர்களைச் சந்தித்து, தன் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கை வைப்பதற்காகத்தான் என்கிறார்கள். அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசுவதற்காகத்தான் நேற்று எம்.பி. மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் என ஒரு கேங் நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு  படையெடுத்து  வந்தார் துணைமுதல்வர்.

துணைமுதல்வர் வந்திருக்கும் தகவல் நிர்மலா சீதாராமனுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. சுமார், 45 நிமிடங்கள் அனைவருமே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் பிறகு மைத்ரேயன் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார் அங்கிருந்த செக்யூரிட்டி. எல்லோரும் எழுந்து நிர்மலா அறைக்குள் நுழைய முயன்றபோது. மைத்ரேயனைத் தவிர எல்லோரும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ‘உங்க யாருக்கும் அனுமதி இல்லை. அவரு மட்டும் போகட்டும்..’ என்று துணைமுதல்வர் உட்பட எல்லோரையும் திருப்பி அனுப்பிவிட்டனர். துணைமுதல்வர் எவ்வளவோ கேட்டும் அவரை உள்ளே விடாமல், செக்யூரிட்டி திருப்பி வெளியே அனுப்பிவிட்டனர். அங்கிருந்து வெளியே வந்த பன்னீர், நேராக டெல்லி விமான நிலையத்துக்குக் கிளம்பிவிட்டார்.

நிர்மலா அறைக்குள் போயிருக்கிறார் மைத்ரேயனுக்கு செம்ம டோஸ் விழுந்துள்ளது. வுள்ளே சென்றது ‘வெளியில் நம்ம துணை முதல்வர் இருக்கிறாரு...’ என அவர் சொல்ல... இப்போதைக்கு நான் அவரை சந்திப்பது சரியாக இருக்காது, அவரை இப்போ பார்க்க வேண்டாம் என்பது எங்க தலைமையின் உத்தரவு.’ என்று கறாராக சொல்லி அனுப்பிவிட்டாராம். நிர்மலா சீதாராமன் பேசியதை சைலன்ட்டாக கேட்டுக்கொண்ட மைத்ரேயன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டாராம்.

கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியது நினைவிருக்கும். அந்த மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் பெயரிலும் அவரது சகோதரர், குடும்பத்தினர் பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன. இவை அனைத்தையும் வருமான வரித் துறைக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு ஆகியோர் பல நாடுகளிலும் சொத்துகள் வாங்கியுள்ளனர். தேனி மாவட்டத்தில் சந்தை விலையைவிடக் குறைந்த விலைக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் வாங்கியுள்ளனாராம். இதேபோல, மாந்தோப்பு உள்பட பல்வேறு விளை நிலங்களையும் வாங்கியுள்ளனர். வருமான வரிச் சோதனையின்போது, சேகர் ரெட்டியிடமிருந்து சிக்கிய டைரியில் பன்னீர் பெயர் இடம் பெற்றுள்ளதால், எந்த நேரத்திலும் பன்னீரின் ஊழல் புகாரை சிபிஐக்கு மாற்றலாம் என்பதால்,  சிபிஐ வசம் வழக்கு போய்விடக் கூடாது என்பதற்காக உதவி கேட்டுத்தான் டெல்லி வருகிறார் என்ற தகவலை முன்கூட்டியே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பிவிட்டது.  ராஜ்நாத்திடமிருந்து நிர்மலாவுக்கு இந்தத் தகவல் போன காரணத்தால்தான் அவர் சந்திக்க மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.