Asianet News TamilAsianet News Tamil

கைக்குலுக்கி புன்முகத்துடன் அமர்ந்த ஒபிஎஸ், ஈபிஎஸ்... - கொண்டாட்டத்தில் அதிமுகவினர்...!!!

panneerselvam hand shak with edappaadi palanichami
panneerselvam hand shak with edappaadi palanichami
Author
First Published Aug 21, 2017, 3:14 PM IST


6 மாத தர்ம யுத்தத்திற்கு பிறகு அதிமுக தலைமை கழகத்திற்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடியுடன் கைக்குலுக்கி இணைந்தார். 

ஜெ மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து பன்னீர்செல்வம் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 

ஜெவிற்கு வழங்கப்பட்ட அனைத்து மரியாதைகளில் சசிகலாவுக்கு சற்றும் குறையவில்லை அமைச்சர்கள் மத்தியில். ஆனால் தனது முதலமைச்சர் பதவியை பிடிங்கிய கோபத்தில் பன்னீர்செல்வம் கட்சியை இரண்டாக உடைத்தார். 

இதைதொடர்ந்து ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை என கூறி அவருக்கென ஒரு தனி பட்டாளத்தை உருவாக்கினார். இதனால் தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு பலத்த வரவேற்பு கொடுத்தனர். 

இதனியையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவும் அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் எடப்பாடி தமது தலைமையிலான அரசை பாதுகாத்து கொள்ளவே மும்முரம் காட்டினார். 

இதைதொடர்ந்து துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரன் எடப்பாடி பதவியை பிடுங்க முற்பட்டதால் பகை முற்றி கொண்டது. 
இதனால் டிடிவியை விட்டு பிரிந்து எடப்பாடி பன்னீரிடம் ஆதரவு கோரினார். அவரது கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். 

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒபிஎஸ் தரப்பும் இபிஎஸ்  தரப்பும் தற்போது இணைந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகம் வந்ததையடுத்து பன்னீர்செல்வமும் அங்கு வந்தார். 

கடந்த 6 மாதத்திற்கு பிறகு பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்தில் கால் வைத்த பன்னீர் எடப்பாடி பழனிசாமியின் கையை குலுக்கி புன்முகத்துடன் அணி இணைப்பை அறிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios