ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகம் நல்ல பொருளாதார பலனை அடைந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட்டி உரையில் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதித்துறையை கவனித்துவரும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார்.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை காரணம் காட்டி ஸ்டாலின் தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து பட்ஜெட்டை பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார். பட்ஜெட் உரையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழகம் நல்ல பொருளாதார பலனை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

2018-19 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9%ஆக உயரும் என பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும். நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார்.