பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

பாஜக தேசிய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அக்கட்சியில் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

இந்நிலையில், பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அதிமுக சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய சிறப்பான, சீரிய தலைமையின் கீழ் வரும் காலங்களில் பாஜக மிகச்சிறந்த உயரத்தை எட்டும் என்ற நம்பிக்கை நிரம்ப இருக்கிறது.

உங்களது நேர்த்தியான தலைமையின் கீழ் பாஜக இனிவரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவிக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே முதல்வர் எடப்பாடி வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்பாகவே துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.