எனது  ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தாலும்  கவலை இல்லை என புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார் . குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக அவர் இவ்வாறு கூறினார் .  மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து அந்தந்த மாநில முதலமைச்சர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர் .  இந்நிலையில் புதுவை சட்டமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ,  தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

இது  குறித்து தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி ,  மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த சட்டத்தையும் புதுவை அரசு ஏற்றுக் கொள்ளாது ,  குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக எங்கள் ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தாலும் கவலை இல்லை ,  அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்  என்று முதல் அமைச்சர் நாராயணசாமி பேசினார் .  இதனையடுத்து செய்தியாளர் சந்தித்த அவர் பிரச்சினைகளை பேசுவதற்கு தான் சட்டமன்ற உள்ளது எதிர்க்கட்சித் தலைவர் முறையாக சட்டமன்றம்  வந்து தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும் .  சட்டமன்றத்திற்கு வராமல் மக்கள் பிரச்சினைகளை பேசாமல் மக்கள் தங்களுக்கு ஓட்டு போட காத்திருக்கிறார்கள் என  கூறுவது கேலிக்கூத்தானது என எதிர்கட்சித் தலைவர் ரெங்கசாமியை சாடினார்.

இதையும் படியுங்க :- கொரோனா வைரஸ் வந்தும் அடங்காத சீனா ராணுவம்...!! 14 கோடி பேரின் தகவல்களை ஆட்டய போட்டு அட்ராசிட்டி...!!

 

தொடர்ந்து பேசிய அவர்,  தேசிய குடிமக்கள் பதிவேடு ,  சிஏஏ,  என்ஆர் சி உள்ளிட்ட விஷயங்களில் என்ஆர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என தெரிவிக்க வேண்டும் என்று கூறினார் அதேபோல் குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக விவாதிக்கவோ எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவோ புதுவை சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் கிரண்பேடி  புதுவை முதலமைச்சர் நாராணசாமிக்கு கடிதம் அனுப்பியிருந்தார் , இந்நிலையில்  அதையும் மீறி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது  பரபரப்பு ஏற்பட்டுள்ளது .  புதுவை அரசு குறித்து ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி ,  நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.