பட்டியலின மக்களை தாழ்த்தி பேசிய ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முடிதிருத்துபவர்களின் சாதியை வைத்து இழிவாக பேசியதற்காக அவசர அவசரமாக திமுக எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கோரியுள்ளார். 

"தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிஅது திமுக பிச்சை போட்டதாக ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அடுத்து தயாநிதிமாறன், நாங்கள் என்ன மூன்றாம் தர, தாழ்த்தப்பட்ட மக்களா? எனப்பேசியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைகள் ஓய்வதற்குள் ஒரு விவாத நிகழ்ச்சியில்,  முடி திருத்துவதை "அம்பட்டையன் கடை" என்று சாதியை வைத்து இழிவாகக் பேசினார் திமுக எம்.எல்.ஏ., பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இதுவும் சர்ச்சையாக வெடிக்க, சமூகநீதி, சமத்துவம் என வெளியே வேடம் போடும் திமுகவினர் தொடர்ந்து இப்படி சாதிவன்மத்தோடு பேசுவது எல்லாம் என்ன நியாயம்? என நாலாபுறமும் கேள்விகள் எழுந்தன. 

இதனை அடுத்து இன்று காலை பட்டியலின மக்களை இழிவாக பேசிய வழக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில மணிகளில் முடிதிருத்தும் நிலையங்களுக்கு ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு விரிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’’கோடைகாலத்தில் மத்திய- மாநில அரசுகளின் மெத்தனமான, அலட்சியமான செயல்பாடுகளையும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும்  சுருக்கத்தையும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் விமர்சித்தேன். அப்போது முடிதிருத்தும் கடை களை திறப்பதில் கூட இந்த  அரசுக்கு சரியான திட்டமிடுதல் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மதுக்கடைகளை திறக்க மாநிலங்களே முடிவெடுக்கலாம் என உத்தரவிட மத்திய அரசு முடிதிருத்தும் கடைகளை திறக்க மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினேன்.

அச்சமயம் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை தவறுதலாக உச்சரித்து விட்டேன். இது எனது பேச்சினூடே வந்துவிட்டது. அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடக்க காலம் முதல் திராவிட இயக்கத்தின் விளைநிலமாக இருந்தவை முடித்துவிட்டோம் நிலையங்கள் திராவிட இயக்க இதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்து பகுத்தறிவு இன உணர்வு மொழிப்பற்று ஆகியவற்றின் பிரச்சார மையங்களாக அவை இருந்தன. அவை தலை முடி திருத்தும் கடைகள் மட்டுமல்ல. முடி எனப்படும் மண்ணை திருத்தம் கடைகளாக செயல்பட்டன. திராவிட இயக்கத்தில் நான்காவது தலைமுறையாக செயல்பட்டுவரும் நான் இத்தகைய வரலாற்றை அறிந்தவன். என்றாலும் தவறுதலாக அச்சொல்லை பயன்படுத்தி அமைக்க மீண்டும் ஒரு முறை எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.