palanisamy and panneerselvam respect mgr

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இன்று எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள்.

அதிமுகவை நிறுவியவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கும் முதல்வரும் துணை முதல்வரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கு குழுமியிருந்த கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி இனிப்புகளை வழங்கினார்.