விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவுக்கு இந்த ஆண்டுக்கான பழனிபாபா விருது வழங்கப்படும் என எஸ்பிஐ காட்சியை அறிவித்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவுக்கு இந்த ஆண்டுக்கான பழனிபாபா விருது வழங்கப்படும் என எஸ்பிஐ காட்சியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி அதிகாரப்பூரிவமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பழனி பாபா என்பவர் இன்றுள்ள இஸ்லாமிய இயக்கங்களின் முன்னோடி ஆவர். தமிழக அரசியலில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டி அரசியல் படுத்தியவர் பழனிபாபா ஆவார், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவருடன் நெருங்கி பழகியவர் பழனிபாபா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களாலேயே மிகவும் மரியாதையாக பழனிபாபா என அழைக்கப்பட்டவர் அவர். தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் செயற்பாட்டாளர் அரசியல்வாதியாகவும் இன்றளவும் இசுலாமிய இயக்கங்களால் போற்றப்படுகிறார். இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சி ஆண்டுதோறும் சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் உரியவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பழனிபாபா பெயரில் விருது வழங்கி வருகிறது.

அந்த அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணனுக்கு பழனிபாபா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரானகவும், தொடர்ந்து மதவாதத்துக்கு எதிராகவும் பேசிவரும் வன்னி அரசுக்கு இந்தாண்டு பழனிபாபா விருதை எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு:- வன்னியரசு அவர்களுக்கு வணக்கம் இந்த கடிதம் தங்களை சீரிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களை சந்திக்கட்டுமாக என பிரார்த்தித்தவனாக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்தில், ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறோம்.

இறைவன் நாடினால் இந்த ஆண்டு சிறந்த ஆளுமை களுக்கான விருது வழங்கி கவுரவிக்க விழா எதிர்வரும் ஜூலை 2ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பழனிபாபா விருது 2022 ஐ பாசிச மற்றும் மதவெறி சக்திகள் எதிர்ப்புக் களத்தில் தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுத்துவரும் தங்களுக்கு வழங்க எங்களது விருது கமிட்டி குழு பரிந்துரைத்துள்ளது. தங்களுக்கு இந்த விருதினை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆகவே தாங்கள் இந்த விருதினை ஏற்றுக் கொள்வதற்கான ஒப்புமையை வழங்கி விருதினைப் பெற்று சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேட்டுக் கொண்டுள்ளார்.
