திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..? நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகே யாருடன் கூட்டணி?- பாரிவேந்தர்
2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகேவை பொறுத்தவரை அநேகமாக தனித்து போட்டியிடுவோம் அல்லது தேசியகட்சியோடு கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மொழியும் கற்க வேண்டும்
தமிழ் பேராய விருதுகள் - 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறக்கூடிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் பெயர்களை சென்னைக்கு வடபழனியில் நடைபெற்ற நிகழ்வில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனர் வேந்தருமான டாக்டர் பாரிவேந்தர் கலந்து கொண்டு அறிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தி மொழி படிக்காததால் எங்களது தலைமுறையை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மகாகவி பாரதியார் 5 - 6 மொழி கற்றுள்ளார். அதே நேரத்தில் மாணவர்கள் தங்களது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆங்கிலம் கூடுதலாக படிப்பதுடன் பிற மொழிகளை கற்று கொள்ளுங்கள் இந்தி தான் கற்க வேண்டும் என்று இல்லை, பிற மொழியை கற்று அறிவை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இலவசம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை தவறாக சிலர் புரிந்து கொள்கின்றனர். கல்வி. மருத்துவம் மட்டும் இலவசம் மற்றவற்றை அவர்களாகவே சம்பாதித்து பெறக்கூடிய சூழலை உருவாக்கி கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திறமையற்ற முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின்..! அமைச்சர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை - இபிஎஸ்
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுகவில் இருந்து எந்தவித அதிருப்தியுடனோ மன வருத்தமாகவோ வெளியேறவில்லையென கூறினார். ஐஜேகே கட்சியை பொறுத்துவரை எங்களது பார்வை தேசிய அளவில் உள்ளதாக கூறினார். சில ஆண்டுக்கு முன் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஐஜேகே தொண்டர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கூறினார். 2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகேவை பொறுத்தவரை அநேகமாக தனித்து போட்டியிடுவோம் அல்லது தேசியகட்சியோடு கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தலில் சமயத்தில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யும் நிலை மாற வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்களின் பின்புலனை ஆராய்ந்து வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். காலபோக்கில் ஓட்டுக்கு பணம் பெறும் நிலை மாறும் கேரளாவில் தற்போது ஓட்டுக்கு பணம் வாங்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அது போன்ற நிலையும் தமிழகத்திலும் உருவாகும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்