விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மநுநீதி நூல் குறித்த சர்ச்சைப்பேச்சால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

 

அந்த வகையில் தலித்தியவாதியும், திரைப்பட இயக்குநருமான ப.ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில், ‘’மனுவால் குடித்தான் நம் ரத்தத்தை… அறிவால் தொடுத்தார் அவர் (திருமாவளவன்) யுத்தத்தை..! சமரசம் மறுத்து சனாதனம் ஒழி... பவுத்த மார்க்கம் அதை ஏற்றிடு இனி..

இருட்டினை விலக்கிடும் அறிவொளி ஏந்திட புரட்சியாளர் வழி நடப்போம் இனி…!பழமைவாத, சாதி ஏற்றத்தாழ்வை, பெண்ணடிமையை போதிக்கும் மநுதர்ம சட்டத்தை  அடி(ழி)த்து நொறுக்கிய அண்ணல் அம்பேத்கரின் வழியில் நின்று அண்ணன் தொல்.திருமா அவர்கள் பேசியதை உள்நோக்கத்துடன் திரித்து அவர்மேல் வன்மத்தை பரப்பிக்கொண்டு இருப்பவர்களே... மநுநீதி உங்களுக்காகவும் தான் எரிக்கப்படுகிறது’’எனத் தெரிவித்துள்ளார்.